News August 7, 2024

ஸ்ரீவி., தேரோட்டம்: நிலைக்கு வந்த ஆண்டாள் தேர்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்புர தேர் திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு வெவ்வேறு மண்டபங்களில் எழுந்தருளி ஆண்டாள், ரெங்கமன்னர் காட்சியளித்தனர். இதனையடுத்து தேரோட்டத் திருவிழா இன்று காலை 9.05 மணிக்கு தொடங்கி ரத வீதிகள் வழியாக வந்து மீண்டும் 12:24 மணிக்கு நிலையம் வந்தடைந்தது.

Similar News

News August 9, 2025

பட்டாசு தொழிலாளிகளுடன் புகைப்படம் எடுத்த இபிஎஸ்

image

சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஆய்வு செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பட்டாசு தொழிலாளர்களிடம் நீண்ட நேரமாக கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண் பட்டாசு தொழிலாளர்களுடன் புகைப்படம் எடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

News August 8, 2025

6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை – இபிஎஸ்

image

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப் பயணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று விருதுநகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் பேசிய இபிஎஸ் தி.மு.க., ஆட்சியில் கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 20 நாட்களில் 11 பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக தெரிவித்தார்.

News August 8, 2025

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அவகாசம் நீட்டிப்பு

image

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு வரும் ஆக.31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் மாத உதவித்தொகை ரூ‌.750, சீருடை, காலணி, பஸ் பாஸ் உள்ளிட்ட 10 வகையான சலுகைகள் வழங்கப்படுகிறது.

error: Content is protected !!