News April 6, 2025
வேலைவாய்ப்பற்ற தி.மலை இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை திட்டத்திற்காக மே 31க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தர்பகராஜ் தெரிவித்தார். பள்ளி, கல்லூரி முடித்தவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டு பதிவு செய்தவர்களுக்கு தகுதி உள்ளது. வயது மற்றும் வருமான வரம்பு உண்டு. tnvelaivaaippu.gov.in-இல் ஆன்லைனில் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News April 12, 2025
தி.மலை மாவட்டத்தில் 427 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தி.மலை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 427 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க https://tiruvannamalai.nic.in இணையதளத்தில் மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். குறிப்பு: 30.04.2025 அன்றே விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள். ஷேர் பண்ணுங்க.
News April 12, 2025
ரயில்வேயில் வேலை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இன்று (ஏப்ரல் 12) முதல் 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக இந்த <
News April 12, 2025
வீடியோ கேம்; தந்தை கண்டித்ததால் சிறுவன் விபரீதம்

திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 4-வது தெருவை சேர்ந்தவர் முனவர் பாஷா. இவரது இளைய மகன் முகம்மது அப்ரார் (14), நேற்று முன்தினம் பகலில் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை முனவர் பாஷா கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த முகமது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.