News April 20, 2024
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் ஏகாதசி விழா

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ சீனிவாசன் பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு நேற்றிரவு (ஏப்ரல் 19) ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் 1008 பாரம்பரிய நெய் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ சீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
Similar News
News May 8, 2025
வேலூர்: வேலை தேடும் இளைஞர்களுக்கு

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே https://www.idbibank.in/ கிளிக் செய்து 20.08.2025 வரை விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிராதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
News May 8, 2025
வேலூர் +2 மாணவர்கள் கவனத்திற்கு

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு கிளிக் https://www.tngasa.in/ செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2. மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News May 7, 2025
வேலூர் மாவட்டத்தில் நாளை கபாடி போட்டி தொடக்கம்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான கபாடி போட்டிகளை நாளை மே 2-ம் தேதி காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைக்கிறார். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.