News March 29, 2024
வேலூர் மாவட்டத்தில் 2641 நபர்களுக்கு தபால் வாக்கு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் நபர்கள் என மொத்தம் 2, 641 நபர்கள் தங்கள் வாக்கினை தபால் வாக்குகள் மூலம் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மார்ச் 29) தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
வேலூர் மக்களுக்கு முக்கிய தகவல்

வேலூரில், பேருந்து நிலையங்கள், ஓட்டல்களில் உணவு பொருட்களை MRP விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். கூடுதல் விலைக்கு விற்பது, காலாவதியான தேதியை மாற்றுவது, அதன்மேல் வேறு ஸ்டிக்கரை ஒட்டுவது போன்றவற்றை கண்டால் FSSAI-க்கு 94440 42322 என்ற வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம். அல்லது சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350673>>தொடர்ச்சி<<>>
News August 9, 2025
வேலூர் மக்களுக்கு முக்கிய தகவல்

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அல்லது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ, புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது, கடையின் முழுமையான முகவரி உள்ளிட்ட ஆதாரங்களோடு புகார் செய்யும்போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.
News August 9, 2025
வேலூரில் மாரத்தான் போட்டி

காட்பாடி அருகே உள்ள சித்தூரில் இன்று (ஆகஸ்ட் 9) மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த மரத்தான் போட்டியில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் போட்டியாளராக பங்கேற்று ஓடினார். சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர் நேதாஜி மைதானம் வரை போட்டி நடைபெற்றது. சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.