News April 26, 2024
வேலூர் மாவட்ட மக்களே உஷார்

மே 1 முதல் 4 வரை தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலையானது உச்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2025
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஏப்ரல் 19) நடத்திய சோதனையில் 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
News April 19, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 19) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News April 19, 2025
வேலூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப்ரல் 25 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஐந்தாவது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.