News April 13, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

வேலூர் மாவட்ட காவல்துறையினரின் இரவு ரோந்து பணிகள் இன்று 13.04.2025 அன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஹைவே காவல்படையினர் தங்களின் கடமைகளைச் சுறுசுறுப்புடன் செய்தனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News April 17, 2025
பீகார் மாணவி பத்திரமாக மீட்பு

பாட்னாவைச் சேர்ந்த 17 வயது மாணவி தனது அண்ணனுடன் சண்டையிட்டு நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) ரயில் ஏறி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். செய்வதறியாது நின்று கொண்டிருந்த அப்பெண்ணை, 2 பெண்கள் பத்திரமாக மீட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மொழி தெரியாமல் தவித்த மாணவி குறித்து உரிய நேரத்தில் தகவல் அளித்த பெண்களை போலீசார் பாராட்டினர்.
News April 16, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 16) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News April 16, 2025
வேலூர் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் ஏப்ரல் 25-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.