News March 31, 2024

வேலூர் மார்க்கெட்டில் மீன்களின் விலை உயர்வு

image

வேலூர் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (மார்ச்.31) மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் கடந்த வாரத்தை விட மீன்களின் விலையும் உயர்ந்தது. பெரிய வஞ்சரம் மீன் ரூ.1400, சிறிய வஞ்சரம் மீன் ரூ.800, இறால் ரூ.500 முதல் 450, கட்லா ரூ.160, நண்டு ரூ.400 முதல் 450, மத்தி ரூ.140 முதல் 160 என மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.

Similar News

News November 19, 2024

காவல்துறை இரவு ரோந்து பணி வெளியீடு

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News November 19, 2024

இந்திய ராணுவத்துக்கு அதிக வீரர்களை அனுப்புவதில் வேலூர் மாவட்டம் 2-ம் இடம்

image

முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி வேலூரில் நேற்று நடந்தது. இதில் பேசிய கலெக்டர் சுப்புலட்சுமி இந்தியாவில் அதிகளவு ராணுவ வீரர்களை அனுப்பும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் 2-ம் இடத்தில் உள்ளது. முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள் ஏதேனும் இருப்பின் அதனை கவனத்துக்கு கொண்டு வந்தால் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார்.

News November 19, 2024

உங்கள் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

image

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நவ.20 மற்றும் 22 ஆகிய 2 நாட்கள் மாலை 4.30 மணி முதல் 6:00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த மக்கள் முகாமில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (நவ.19) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.