News February 15, 2025

வேலூர் மண்டல மாநாடு டி-ஷர்ட் அறிமுகம்

image

அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை வேலூர் மண்டல மாநாடு பிப்ரவரி 16 அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு டி-ஷர்ட்டுகளை, மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் இன்று வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 9, 2025

ராணிப்பேட்டை ரேஷன் கார்டு தாரர்கள் கவனத்திற்கு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது அந்தந்த வட்டாச்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டையில் பெயர், முகவரி திருத்தம், உறுப்பினர் சேர்க்கை, புகைப்பட பதிவேற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 9, 2025

ராணிப்பேட்டையில் வீரமரணம் அடைந்த சோழன்

image

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் தான் கி.பி 949ல் முதலாம் பராந்தகனின் மகன் ராஜாதித்யனுக்கும், ராஷ்டிரகூடர்களின் கங்க இளவரசர் பூட்டுகனுக்கும் இடையே போர் ஏற்பட்டது. ஆதித்த கரிகாலனை போல வீரமிக்க சோழ இளவரசனான ராஜாதித்யன் இந்த போரில் வீரமரணம் அடைந்தான். இவரது வீரத்தை போற்றும் விதமாக தான் அரக்கோணம் CISF ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் ராஜாதித்ய சோழன் (RTC), தக்கோலம் என மறுபெயரிடப்பட்டது. ஷேர் பண்ணுங்க

News August 9, 2025

ராணிப்பேட்டை: அ.தி.மு.க ஆலோசனை கூட்டம்

image

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பயணித்து வரும் அதிமுக கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான EPS இந்த மாதம் ராணிப்பேட்டைக்கு வருகை தர உள்ளார். இந்த நிலையில் அவருக்கு சிறப்பாக வரவேற்பளிக்கவும் உரிய ஏற்பாடுகளை செய்திடவும், மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் சுகுமார் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

error: Content is protected !!