News April 29, 2025
வேலூர்: பேட்மிண்டன் விளையாட்டு இலவச பயிற்சி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் பிரிவு சார்பில் காட்பாடியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ஸ்டார் அகாடமி பேட்மிண்டன் பயிற்சி மையம் வரும் மே 1-ந் தேதி தொடங்கப்படுகிறது. இதில் 20 ஆண்கள், 20 பெண்கள் என மொத்தம் 40 பேருக்கு பேட்மிண்டன் விளையாட்டு பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான மாணவர்கள் தேர்வு நேற்று மாவட்ட விளையாட்டு மையத்தில் நடந்தது. ஷேர் பண்ணுங்க
Similar News
News April 30, 2025
காட்பாடிக்கு ரயிலில் வந்த 1,358 டன் யூரியா

மும்பையில் இருந்து சரக்கு ரயில் மூலம் நேற்று காட்பாடிக்கு 1,358 டன் யூரியா, காம்ப்ளக்ஸ் வந்தது. இவை வேளாண் கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் முருகன் முன்னிலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், தர்மபுரி, விழுப்புரம், ஆகிய மாவட்டங்களுக்கு லாரி மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உரக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
News April 29, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல்- 29) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News April 29, 2025
வேலூர்: அரசு கல்லூரி எண்களை தெரிஞ்சிக்கோங்க

12th முடித்து காலேஜ் அட்மிசனுக்கு காத்திருப்போருக்கு இதை பகிரவும். வேலூர் அரசு கல்வியல் கல்லூரி-0416-2249703, திருமகள் மில்ஸ் காலேஜ்-04171-220162, வேலூர் மருத்துவ கல்லூரி- 0416-2260900, ஊரிசு கல்லூரி- 0416-2220317, திருவள்ளூவர் யுனிவர்சிட்டி-0416-2274100, MGR ஆர்ட்ஸ் காலேஜ்-04174259556, முத்துரங்கம் கலைக்கல்லூரி-0416-2262068, ஆக்ஸிலியம் கல்லூரி-0416-2241774, DKM மகளிர் காலேஜ்-0416-2266051.