News May 15, 2024
வேலூர் பள்ளி மாணவா்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி

வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு ரோபோடிக்ஸ் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கி, 2 நாள்கள் நடைபெறுகிறது. இதில், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 6 முதல் 1ஆம் வகுப்பு பயிலும் 24 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.
Similar News
News April 30, 2025
வேலூரில் விசிக பிரமுகர் வெட்டி படுகொலை

வேலூர் அடுத்த ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சரத்குமார் (32). இவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின், தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பாளராக உள்ளார்.
News April 30, 2025
அக்ஷய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

அன்னை மகாலட்சுமி செல்வம், வளங்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் ஆவார். அந்தவகையில் அக்ஷய திருதியான இன்று(ஏப்.30) வேலூரில் உள்ள மகாலட்சுமி (அ) பெருமாள் கோயிலுக்கு சென்று விட்டு தங்கம் வாங்க செல்லுங்கள். காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். முடியாதவர்கள் கல் உப்பு வாங்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினால் சிறப்பு. ஷேர் பண்ணுங்க
News April 30, 2025
காட்பாடிக்கு ரயிலில் வந்த 1,358 டன் யூரியா

மும்பையில் இருந்து சரக்கு ரயில் மூலம் நேற்று காட்பாடிக்கு 1,358 டன் யூரியா, காம்ப்ளக்ஸ் வந்தது. இவை வேளாண் கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் முருகன் முன்னிலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், தர்மபுரி, விழுப்புரம், ஆகிய மாவட்டங்களுக்கு லாரி மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உரக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.