News May 16, 2024
வேலூர்: தலையில் கல்லை போட்டு கொலை… கைது!

குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரில் கடந்த மாதம் தூங்கிக் கொண்டிருந்த சின்னக்குழந்தை (75) என்பவர் தலையின் மீது தரணி என்பவர் கல்லை போட்டு கொலை செய்து விட்டு ஓடிவிட்டார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து தரணியை நேற்று கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
Similar News
News August 11, 2025
வேலூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் பட்டியல்

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.11) நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
News August 10, 2025
வேலூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் பட்டியல்

வேலூர் மாவட்டத்தில் இன்று(ஆக.10) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
News August 10, 2025
வேலூர் மக்களே கனமழை எச்சரிக்கை – உஷார்!!

வேலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நேற்றை போலவே இன்றும் (ஆக.10) இரவு வரை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை வர வாய்ப்புள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படலாம். உணவு, மெழுகுவர்த்தி, விளக்கு போன்ற அத்தியாவசிய பொருட்களை எளிதாய் எடுக்கும் வண்ணம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க சொல்லுங்க.