News April 27, 2025
வேலூர்: கஷ்டங்களை நீக்கும் கால பைரவர்

வேலூர் மாவட்டம் செங்காநத்தம் மலையில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 10 கைகளுடன் 3 1/2 அடி உயரத்தில் பைரவர் அருள்பாலிக்கிறார். மிகவும் சக்திவாய்ந்த இந்த கோவிலில் அஷ்டமி நாளில் வழிபட்டால் திருமண தடை நீங்கும் மற்றும் குழந்தை வரம் கிடைக்கும். மேலும், 108 ஒரு ரூபாய் நாணயத்தால் அபிஷேகம் செய்தால் பணக்கஷ்டம் மற்றும் இழந்த செல்வத்தை மீட்கலாம் என்பது ஐதீகம். கடனில் சிக்கியவர்களுக்கு பகிரவும்
Similar News
News April 28, 2025
வேலூர் இறகு பந்து பயிற்சி வீரர்கள் தேர்வு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்டார் அகாடெமி இறகு பந்து பயிற்சி மையத்திற்கு வீரர்கள் தேர்வு நாளை (ஏப்ரல் 28) காலை 6:30 மணியளவில் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 12 வயது முதல் 20 வயதுக்குள் உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு விளையாட்டு வீரர்களுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News April 27, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 27) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News April 27, 2025
சேம்பாக்கம்: திருட முயன்றவர்களுக்கு தர்மஅடி

வேலூர், சேம்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் தாமோதரன் என்ற இருவரும் வாணியம்பாடி மாட்டுச் சந்தையில் ஏப்ரல் 26 அன்று இருசக்கர வாகனம் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். உடனடியாக இருவர் மீது வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.