News March 26, 2024

வேலூர் ஒரே நாளில் 13 பேர் வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இன்று (மார்ச் 26) ஒரே நாளில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 வேட்பாளர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை வேலூர் தொகுதியில் போட்டியிட 31 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News April 14, 2025

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 14) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News April 14, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று ஏப்ரல் 14 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News April 14, 2025

திடீர் மின் தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

error: Content is protected !!