News February 22, 2025
வெள்ளகோவிலில் திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமி

வெள்ளக்கோவில் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். எவ்வளவோ மறுத்தும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இலவச உதவி தொலைபேசி சேவை எண் 1098- க்கு அழைத்து சிறுமி புகாரளித்தார். இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
Similar News
News April 21, 2025
திருப்பூர் வட்டாட்சியர் அலுவலர்கள் எண்கள்

▶️திருப்பூர் (வ) வட்டாச்சியர் 0421-2200553. ▶️அவினாசி வட்டாச்சியர் 04296-273237. ▶️ பல்லடம் வட்டாச்சியர் 04255-253113.▶️தாராபுரம் வட்டாட்சியர் 04258-220399. ▶️ காங்கேயம் வட்டாட்சியர் 04257-230689. ▶️ உடுமலைபேட்டை வட்டாட்சியர் 04252-223857. ▶️ மடத்துக்குளம் வட்டாட்சியர் 04252-252588. ▶️ திருப்பூர் (தெ) வட்டாட்சியர் 0421-2250192.▶️ ஊத்துக்குளி வட்டாட்சியர் 04294-260360. மக்களே SHARE பண்ணுங்க.
News April 21, 2025
பொதுமக்களிடம் குறைகளைக் கேட்ட கலெக்டர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று கலெக்டர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அதன்படி இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.
News April 21, 2025
திருப்பூர்: பல்லடம் புத்தரச்சல் 108 பைரவர் ஆலயம்!

திருப்பூர், பல்லடம் புத்தரச்சல் கிராமத்தில் புகழ்பெற்ற 108 பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில், 21 அடி உயரத்தில் கால பைரவர் சிலை உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக, இங்கு பைரவர் வீற்றிருக்கிறார். அஷ்டமி நாளான இன்று, 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.