News May 16, 2024
வெளிநாடுகளில் உயர் கல்வி பயில பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் வெளிநாடுகளில் உயர் படிப்பை பயில விரும்பும் ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணவர்கள் https://overseas. tribal. gov. in/ என்ற இணையதளத்தின் மூலம் 31.05.2024-க்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களை https://overseas. tribal. gov. in/ என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் எனவும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட எஸ்சி/எஸ்டி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்.
Similar News
News April 20, 2025
தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 20, 2025
ஏலக்காய் மாலை அணிவித்த தேனி மாவட்ட தலைவர்

திண்டுக்கல்லில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருங்கோட்ட அளவிலான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட பாஜக தலைவர் P.இராஜபாண்டியன் கலந்து கொண்டு மாநில தலைவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பேராசிரியர் இராம ஶ்ரீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
News April 20, 2025
தேனி : இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

தேனி அருகே உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச சோலார் பேனல் பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் தொழில் முனைவோர் பயிற்சி 21.04.2025 நாளை முதல் நடைபெற உள்ளது. 18 வயது பூர்த்தி செய்த கிராமப்புற நபர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் தகவலுக்கு 9442758363 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் .