News April 15, 2025

விஷச்சாராய வழக்கு 3 மாதத்தில் முடிக்கப்படும்- சிபிஐ

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு இன்னும் 3 மாதத்தில் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளிகளான தமோதிரன், கன்னுகுட்டி ஆகியோர் ஜாமின் வழங்க மனுதாக்கல் செய்திருந்த நிலையில், ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் சிபிஐ கூறியுள்ளது. மேலும், வழக்கில் எத்தனை பேர் விசாரணையில் உள்ளார்கள் என்பதை தெரிவிக்க சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News August 5, 2025

கள்ளக்குறிச்சி: 10th போதும்… ரயில்வேயில் வேலை ரெடி

image

கொங்கன் ரயில்வேயில் உள்ள 28 கீமேன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீமேன் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்த 18 – 28 வயது உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,500 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>உள்ள விண்ணப்பத்தை வரும் ஆக.11க்குள் பூர்த்தி செய்து நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். 10th முடித்த நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

கள்ளக்குறிச்சியில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

கள்ளக்குறிச்சியில் இன்று (ஆக.05) பல்வேறு இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், திருக்கோவிலூர், கல்வராயன்மலை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க பெறாத பெண்கள் பங்கேற்று விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பெற விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

கள்ளக்குறிச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

கள்ளக்குறிச்சியில் ஆகஸ்ட்-5 மகாலட்சுமி திருமண மண்டபத்திலும், சங்கராபுரம் நாகபிள்ளை திருமண மண்டபத்திலும், அதையூர் ஏ.எம்.எஸ் திருமண மண்டபத்திலும், கூகையூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஆவி.கொளப்பாக்கம் செளபாக்யா திருமண மண்டபத்திலும், தொரடிப்பட்டு காமாட்சி அம்மன் கோயிலிலும் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க பெறாத பெண்கள் பங்கேற்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.

error: Content is protected !!