News March 18, 2025

விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 2025 மாதத்திற்கான, விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 21.03.2025 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள  விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News

News March 18, 2025

காஞ்சிபுரத்தில் சிறந்த ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் 

image

காஞ்சிபுரத்தில் ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று(மார்.17) நடைபெற்றது. அப்போது   நல்லிணக்கத்துடன் சாதி வேறுபாடின்றி மயானம் பயன்படுத்தும் சிறந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். 

News March 18, 2025

காஞ்சிபுரம் கண்காணிப்புக் குழு பதவிகளுக்கான விண்ணப்பம்

image

காஞ்சிபுரம் மாவட்டம், இயன்முறையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013 மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் உறுப்பினர்களின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில் புதிய உறுப்பினர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை மார்ச் 28க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News March 18, 2025

காஞ்சி: தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

image

களியாண் பூண்டியில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தமிழ்செல்வி வெளியிட்ட அறிக்கையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில், வரும் மே, ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று(மார்.18) முதல், வரும் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.

error: Content is protected !!