News March 21, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் 2.34 லட்சம் விவசாயிகள் பயன்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில், கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல் 2025 பிப்ரவரி மாதம் வரை 2,34,881 விவசாயிகள், தங்களது விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்து பயனடைந்துள்ளனர். இதில் விழுப்புரம்-27693, திண்டிவனம்-17785, செஞ்சி-47663, அரகண்டநல்லூர்-70571, அவலூர்பேட்டை-37659, விக்கிரவாண்டி-33268, மரக்காணம்-45, வளத்தி-207 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
Similar News
News March 27, 2025
ரயில்வே வேலை: சூப்பர் சம்பளம்

இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் <
News March 27, 2025
கோர விபத்தில் ஆட்டோ கவிழ்ந்து இளம்பெண் பலி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் மூங்கிலான், 30 ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ரேவதி, 27; இவர்களது ஒரு வயது மகள் தன்விகா. இவர்கள் மூவரும் கடந்த 24ஆம் தேதிஆட்டோவில் சென்றபோது, சாரம் அருகே கார் மோதி ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த ரேவதி நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
News March 26, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (26.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.