News April 26, 2025
விழுப்புரத்தில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரம் நகரத்தில் அமைந்துள்ள VRP மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற மே.10ம் தேதி மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு கலந்துகொள்ள உள்ளனர். இந்த முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 27, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (27.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News April 27, 2025
நீட் தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு

இந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வு மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதை ஒட்டி திண்டிவனம் Dr.அப்துல்கலாம் நீட் பயிற்சி மையம் சார்பில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 30.04.2025 அன்று காலை 10மணி முதல் 1மணி வரை இலவச நீட் மாதிரித் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என பயிற்சி மைய நிர்வாகி சுப்பிரமணியன் தெரிவித்தார். தொடர்புக்கு: 9942132049/6380044810
News April 27, 2025
ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க