News March 22, 2025
விழுப்புரத்தில் பிரபல ரவுடி கைது

விழுப்புரம் ஐஜேகே பிரமுகரை கொலை செய்ய முயன்றதாக, பிரபல ரவுடி கலையரசன் கைது செய்யப்பட்டார். சுவர் விளம்பரம் எழுதுவதில் ஐஜேகே நிர்வாகி ஆண்டனி ராஜ் என்பவருக்கும் கலையரசனுக்கும் பகை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஆண்டனியை கத்தியால் கொலை செய்ய முற்பட்டபோது, விழுப்புரம் நகர போலீசார் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கலையரசன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Similar News
News March 26, 2025
10வது பாஸ் போதும்; இலவச பயிற்சியுடன் வேலை

தமிழ்நாடு அரசு சார்பில், மருத்துவ துறை சார்ந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், முதியவர்களை பார்த்துக்கொள்ளும் வேலைவாய்ப்புகளை பெறலாம். 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பயிற்சி – 3 மாதம். இதற்கு வயது வரம்பு கிடையாது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தினை அணுகவும். ஷேர் பண்ணுங்க…
News March 26, 2025
முயல் வேட்டையின்போது துண்டான வாலிபர் விரல்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியுடன் தென்பசார் காட்டுப் பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றார். துப்பாக்கியின் டிரிகர் பகுதி உடைந்திருப்பதை கவனிக்காமல் வெடிமருந்தினை லோடு செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில் அஜித்குமாரின் கட்டை விரல் துண்டானது. அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News March 26, 2025
கோர விபத்தில் கவிழந்த ஆட்டோ

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மூங்கிலான் (30), ரேவதி(27) தம்பதி. இவர்களது ஒரு வயது மகள் தன்விகா. மூங்கிலான் திண்டிவனத்திலிருந்து ஆட்டோவில் சாரம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் வந்த குழந்தை உட்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.