News April 4, 2025
விழுப்புரத்தில் கார் கவிழ்ந்து விபத்து பெண் பலி

நெய்வேலி 26 வது பிளாக் பகுதி சேர்ந்தவர் அழகானந்தம், 55. நேற்று இரவு இவர் குடும்பத்துடன் காரில் சென்னை நோக்கி சென்றார். இரவு 8:00 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள பேரங்கியூர் நோக்கி சென்றபோது, கார் திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது காரில் இருந்த மனைவி சுந்தரி, 50; சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News April 5, 2025
கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி

திண்டிவனத்தை அடுத்த ரெட்டனை பகுதியை சேர்ந்த சிறுமி தமிழரசி. இவர் ரெட்டனையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தார். அதே கிராமத்தில் வயலில் உள்ள கிணற்றுக்கு அருகே சிறுமி சென்றபோது, எதிர்பாராத விதமாக கால் தவறி சிறுமி கிணற்றுக்குள் விழுந்தார். அக்கம்பக்கத்தினர் கிணற்றில் மூழ்கிய சிறுமியை மீட்க முயற்சித்தபோது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
News April 4, 2025
விழுப்புரம் மின் வாரிய குறைகேட்பு சிறப்பு முகாம்

விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் சிறப்பு முகாம் நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. முகாமில், பொதுமக்கள் மின் மீட்டர் பழுது, மாற்றம், குறைந்த மின்னழுத்தம், மின் கட்டண பிரச்னை, சேதமடைந்த கம்பங்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். இந்த முகாம், செஞ்சி, கண்டமங்கலம், திண்டிவனம் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும்.
News April 4, 2025
1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <