News April 1, 2025

விளையாட்டு விடுதி சேர்க்கை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்பட்டு வரும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்லூரி மாணவ,மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது. சிறப்பு நிலை விடுதியில் சேர்வதற்கு www.sdat.tn.gov.in -ல் விண்ணப்பிக்க வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி கடைசி நாளாகும். மாநில அளவிலான தேர்வு போட்டிகள் ஏப்ரல் 8ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 9, 2025

டிஜிட்டல் திருமண அழைப்பிதழ் மோசடி, காவல்துறை எச்சரிக்கை

image

இணைய குற்றவாளிகள் டிஜிட்டல் திருமண அழைப்பிதழ்களை வாட்ஸ் அப்பில் கோப்புகளாக அனுப்புகின்றனர். இந்த கோப்புகளை(Apk file) பதிவிறக்கினால் மோசடியாளர்கள் சட்டவிரோத பண பரிமாற்றங்களுக்கு உங்களது வங்கி கணக்கை பயன்படுத்தி கொள்வார்கள். எனவே தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் திருமண அழைப்பிதழ் வந்தால் அதை தொடவோ திறக்கவோ வேண்டாம். இணைப்புகளை திறப்பதற்கு முன் அனுப்புநரை சரிபார்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்

News April 9, 2025

கொலை வழக்கில் 8 வருடத்திற்கு பிறகு தீர்ப்பு

image

மயிலாடுதுறை கொத்த தெருவை சேர்ந்த மீனாட்சி. அவரது கணவர் தீனதயாளனிடம் ஜீவனாம்சம் கேட்டதற்காக தீனதயாளன் மற்றும் அவரது இரண்டாவது மனைவியின் மகன் செந்தில்குமார் இருவரும் சேர்ந்து மீனாட்சியை கடந்த 2017 ஆம் ஆண்டு அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். தீனதயாளன் வயது முப்பால் உயிரிழந்த நிலையில் செந்தில்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனையும் ரூ. 5000 அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

News April 8, 2025

மயிலாடுதுறையில் தரிசிக்க வேண்டிய கோயில்கள்

image

மயிலாடுதுறையில் வழிபட வேண்டிய முக்கிய கோயில்கள். ஸ்ரீ மயூரநாதர் ஆலயத்திற்கு மேற்கில் உள்ள ஸ்ரீ ஐயாநப்பர் ஆலயம். கூறைநாட்டில் உள்ள ஸ்ரீபுனுகீஸ்வரன் ஆலயம். காவிரி பாலத்திற்குத் தென்கரையில் உள்ள ஸ்ரீ பாலக்கரை விஸ்வநாதர் ஆலயம். . மயூரநாதஸ்வாமி கோவிலின் வடக்கு வாயில் அருகே உள்ள (உட்பிரகார தொடக்கம்) விஸ்வநாதர் கோயில். உங்களுக்கு தெரிந்த கோயில்களை கமெண்ட் செய்யவும்

error: Content is protected !!