News April 1, 2025
வில்லுக்குறி ஆற்றங்கரையில் கிடந்த சடலம்

வில்லுக்குறி ஆற்றின் கரையில் உடல் அழுகிய நிலையில்கண்டறியப்பட்டது. இரணியல் போலீசார் உடனடியாக அந்த உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணை செய்ததில் அவர் மாடத்தட்டு விளை பகுதியை சேர்ந்த ஆல்வின் என தெரிய வந்தது.மீனவரான இவர் கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில்,இவரின் இறப்பு குறித்து இரணியல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
தஞ்சையில் இருந்து 1250 டன் ரேஷன் அரிசி வருகை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக இன்று தஞ்சாவூரில் இருந்து 1,250 டன் ரேசன் அரிசி, சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து லாரிகள் மூலம், அரிசி, பள்ளி விளையில் உள்ள மத்திய அரசின் உணவுபொருள் சேமிப்பு திட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டது.
News April 19, 2025
கண்டித்த சூப்பர்வைசரை பிளேடால் வெட்டிய ஊழியர்

எறும்புக்கோட்டையைச் சேர்ந்த அபுதாகிர்(42), வலை கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது கம்பெனியில் அமரேஷ்வர் சுவைன் வேலை பார்த்து வந்த நிலையில், அவர் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை அபுதாகிர் கண்டித்ததால், அபுதாகிரை, அமரேஷ்வர் பிளேடால் வெட்டி, கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில், ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News April 19, 2025
நாகர்கோவிலின் அடையாளம் நாகராஜா கோயில்

இந்தியாவிலேயே மூலவர் நாகராஜா சிலை உள்ளது இங்கு மட்டும் தான். கருவறையில் நாகராஜா இருக்கும் இடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணல் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மணல் ஆடி – மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை – ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறுவது அதிசயத்தக்க ஒன்றாகும். நாகதோஷம் நீங்க இங்கு பக்தர்கள் வருவது வழக்கம் *ஷேர் பண்ணுங்க