News May 4, 2024
விருதுநகர்:பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைப்பு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 573 மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு கடந்த 1.7.23 முதல் தினசரி ஊதியமாக 490 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மே 1 முதல் விருதுநகர் ஒன்றியத்தில் 23 மஸ்தூர் பணியாளர்களும், மற்ற 10 ஒன்றியங்களில் தலா 20 பணியாளர்கள் என 223 பணியாளர்களுக்கு மட்டுமே தினசரி வேலை என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடைச் சட்டம் 2006 ஐ மீறி திருமணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் தொடர்பாக வரும் புகார்களுக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
ரூ.20 லட்சம் மதிப்பில் சுவாச குழாய் அகநோக்கி இயந்திரம்
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் நுரையீரல் சிகிச்சை பிரிவிற்காக ரூ.20 லட்சம் மதிப்பில் சுவாசக் குழாய் அகநோக்கி இயந்திரம் வழங்கப்பட்டது. இதனை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
News November 20, 2024
திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சப் டிவிஷன் டி.எஸ்.பி. ஜெகநாதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வரும் பொன்னரசு திருச்சுழி டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.