News May 30, 2024

விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு சிறப்பு பயிற்சி

image

காவலர் குடும்ப நல மையம் சார்பாக மகிழ்ச்சி திட்டம் சென்னை மாநகரில் 2021 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விருதுநகர் மாவட்ட போலீசார் பயன்பெறும் வகையில் தென் மண்டல ஐஜி உத்தரவின் பெயரில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விருதுநகர் சூலக்கரையில் உள்ள தனியார் திருமண அரங்கில் நேற்று பயிற்சி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு.

Similar News

News April 21, 2025

விருதுநகர் தேர்தல் வழக்கை புதிதாக விசாரிக்க உத்தரவு

image

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் நீண்ட இழுபறிக்குப் பிறகு சுமார் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி விஜயபிரபாகரனும், தனக்கு எதிராக வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி மாணிக்கம் தாகூரும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை தொடக்கத்தில் இருந்து புதிதாக விசாரிக்க இன்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

News April 21, 2025

விருதுநகரில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவு அதிகாரி, விற்பனை ஆலோசகர் உள்ளிட்ட சில பிரிவுகளில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் 19- 35 வயதிற்குர்பட்ட இளங்கலை பட்டம் பெற்ற ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 21, 2025

பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு

image

அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் காலனியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(41). இவர் அப்பகுதியில் ஏப்.17 அன்று நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்திய போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் பலத்த தீக்காயமடைந்தார். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!