News March 27, 2024
விருதுநகரில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு.. 492 பேர் ஆப்சென்ட்!

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று துவங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை விருதுநகர் சிவகாசி இரு கல்வி மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வில் 22,005 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 10,589 மாணவர்கள் 10,924 மாணவிகள் என 21,513 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 492 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
Similar News
News April 14, 2025
சிவகாசி மேயரின் மகனுக்கு கட்சியில் பொறுப்பு

திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி பகுதி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பட்டியல் இன்று (பிப்.14) வெளியாகியது. இதில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதாவின் மகன் பிர்லா இன்பம் சிவகாசி மாநகர திமுக இளைஞர் அணி 5ஆம் பகுதி அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிதாக தேர்வான பிர்லா இன்பம் நிதி அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான தங்கம் தென்னரசுவிடம் வாழ்த்து பெற்றார்.
News April 14, 2025
ரயிலில் 120 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

மதுரையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனை தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் துரைசாமி தலைமையிலான ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கழிவறை அருகே 4 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் இருந்த 120 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்து,ரயிலில் கொண்டு வந்தவர்கள் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 14, 2025
சிவகாசியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

சிவகாசியில் செயல்படும் தனியார் அலுமினிய தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 25 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 40 வயதிற்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <