News August 14, 2024
விராலிமலை அருகே 8 பேர் கைது

மலைக்குடிப்பட்டியில் 10க்கும் மேற்பட்டோர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இலுப்பூர் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து சூதாடிய ராசு (51) கந்தசாமி (56) நல்லதம்பி (72) அண்ணாமலை (48) பச்சையப்பன் (63) தங்க பழனியாண்டி (72) வேலு (65) செல்வம் (56) உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இருவர் தப்பியோடினர்.
Similar News
News August 9, 2025
புதுக்கோட்டை: டிகிரி போதும்… மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 9, 2025
புதுக்கோட்டை: குடும்ப அட்டையில் பிரச்னையா?

பொது வினியோக திட்டத்தில் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது வினியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் போன்றவைகளை மாற்றிக்கொள்ளவும். இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்
News August 9, 2025
புதுகை விநாயகர் சிலை, ஆட்சியர் அறிவுறுத்தல்

புதுகை மாவட்டத்தில் விநாயகர் சிலை செய்வோர் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைக் கொண்டு சிலைகளை செய்ய வேண்டும், சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிமணிகள் பூஜை பொருட்கள் பூக்கள், எல்இடி விளக்கு உள்ளவற்றை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், தெர்மாகோல், ரசாயனம் கொண்ட சாயங்கள், எண்ணை வண்ணப் பூச்சுகளை, ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகளை பயன்படுத்தக் கூடாது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.