News April 13, 2024

விராட் கோலிக்கு மெழுகு சிலை

image

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 18 அன்று இந்திய வீரர் விராட் கோலியின் மெழுகு சிலையை நிறுவவுள்ளதாக ஜெய்ப்பூர் நஹர்கார் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. கோலியின் சிலையை நிறுவ வேண்டுமென குழந்தைகளும், இளைஞர்களும் வேண்டுகோள் விடுத்த நிலையில், 35 கிலோ எடையில் 5.9 அடி உயரத்தில் இந்த சிலையானது உருவாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளிடையே கிரிக்கெட்டின் அடையாளமாக விராட் கோலி விளங்குகிறார்.

Similar News

News April 27, 2025

தாக்குதலுக்கு கடுமையான பதிலடி உறுதி : PM மோடி

image

பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என PM மோடி கூறியுள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், சர்வதேச தலைவர்கள் என்னைத் தொடர்புகொண்டு இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர் எனக் கூறினார். முழு உலகமும் நம்முடன் நிற்கிறது என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் மோடி உறுதியளித்தார்.

News April 27, 2025

நீட் தேர்வு மோசடி புகாரளிக்க இணையதளம் தொடக்கம்

image

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற மோசடி புகார்களை அளிக்க புதிய இணையதளங்களை தேசிய தேர்வு முகமை (NTA) தொடங்கியுள்ளது. NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN இணையதளங்களின் வாயிலாக ஆதாரத்துடன் புகார்களை பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள NTA, ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுவோரை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

News April 27, 2025

பஹல்காம் தாக்குதல்: முஸ்லீம் மதத்தை துறந்த ஆசிரியர்

image

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஆசிரியர் ஒருவர் முஸ்லீம் மதத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த சபீர் உசேன், ‘மதத்தால் ஏன் ஒருவர் கொல்லப்பட வேண்டும். தொடர்ந்து மதம் வன்முறைக்கு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கிறேன். இனியும் இதை பொறுத்துக் கொள்ள முடியாது’ என தெரிவித்துள்ளார். இனி நடுநிலை வகித்து மனிதகுலத்தை மட்டுமே பின்பற்ற போவதாகவும் அவர் சொல்கிறார்.

error: Content is protected !!