News April 6, 2025
விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி பலி

திருத்தணி அருகே உள்ள அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன் (21). திருத்தணி அரசு கல்லூரியில் பயின்று வந்த இவர், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி தனது நண்பர் ராகுலுடன் பைக்கில் திருத்தணி நோக்கி சென்றபோது, குமாரகுப்பம் அருகே எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானார். பலத்த காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், பூவரசன் நேற்று (ஏப்ரல் 5) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News April 9, 2025
திருவள்ளூர்: திருமணமாக செல்ல வேண்டிய காலபைரவர் கோவில்

திருவள்ளூர் மாவட்டம் தும்பரம்பேடு கிராமத்தில் பைரவன் மேடு என்ற குன்றின் மேல் ஸ்ரீ மகாகால பைரவர் கோவில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தல விருட்சமாக செம்மரம் உள்ளது. அஷ்டமி, தேய்பிறை மற்றும் கார்த்திகை மாதங்களில் வழிப்பட்டால் வேலையும், திருமண பாக்கியமும், நல்ல படிப்பும் கிடைக்கும் என்பது ஐதீகம். *திருமணமாகாத, வேலையில்லாத நண்பர்களுக்கும் பகிரவும்*
News April 9, 2025
திருவள்ளூர்: வேலை இல்லாதோருக்கு உதவித் தொகை

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. 10th பாஸ்/ஃபெயில், 12th பாஸ், பட்டதாரிகளும்(45 வயதுக்குள்) மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியா் மு. பிரதாப் தெரிவித்துள்ளார். *சூப்பர் வாய்ப்பு. தெரிந்த 10th பாஸ்/ஃபெயில்,12th பாஸ், பட்டதாரிகளுக்கு பகிரவும்
News April 9, 2025
திருவள்ளூரில் தொழில் தொடங்க அழைப்பு

திருவள்ளூர் மகலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் தொழில் துவங்க ரூ.1 கோடி வரை வங்கி கடன் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், 25 வயதுக்கு மேல் இருக்கும் மு.படைவீரர்கள் மகன்கள், முன்னாள் படைவீரருடன் இணைந்து பங்குதாரர் ஆக தொழில் தொடங்கலாம்’ என தெரிவித்தார். *ஷேர் பண்ணவும்*