News November 12, 2024
விதைப்பண்ணை அமைக்க மானியம் -உதவி இயக்குனர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் மானியத்துடன் விதைப்பண்ணை அமைக்க விவசாயிகள் முன்வரவேண்டும் என விதை உரிமச்சான்று உதவி இயக்குனர் சி.சக்திகணேஷ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “மாவட்டத்தில் விதைப்பண்ணை அமைக்க தேவையான வல்லுநர் விதை, ஆதாரநிலை மற்றும் சான்று நிலை நெல் விதைகளை வட்டார விரிவாக்க மையங்களில் பெறலாம்; விதைகளை வாங்கும்போது காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும; அதற்கான மானியமும் வழங்கப்படும்”.
Similar News
News November 19, 2024
Gpay வில் லட்சம் பெற்ற VAO பணிநீக்கம் – ஆட்சியர் உத்தரவு
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர் கிராமத்தைச்சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணிடம் வீட்டுக்கு பட்டா வாங்கி தருவதாக அந்த கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வரும் வி.ஏ.ஓ ராக்கு என்பவர் ரூ.3000 Gpay வாங்கிய குற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News November 19, 2024
சிவகங்கை மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கு விருது
சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக குமாரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரித்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. குழந்தைகள் தினத்தன்று(நவ.14) சிறந்த பள்ளிக்கான கேடயம், பள்ளி கல்வித்துறை அமைச்சரால் வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் கரங்களில் விருதினை வழங்கி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இன்று(நவ.19) வாழ்த்து பெற்றனர்.
News November 19, 2024
சிவகங்கையில் மழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(நவ.,19) 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் சிவகங்கை மாவட்ட மக்கள் முன்னேற்பாடு செய்து கொள்வது நல்லது. SHARE IT.