News March 31, 2025
வி.ஆர்.வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கத் தடை

சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல வி.ஆர்.வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகளின்படி வணிக வளாகங்களில் போதுமான வாகன நிறுத்துமிட வசதி செய்து தர வேண்டியது அவசியம் எனக் கூறி, மனு தாக்கல் செய்தவருக்கும் ரூ.12,000 இழப்பீடாக வழங்கவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 3, 2025
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. வேளச்சேரி, ஆதம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பல்லாவரம், கோயம்பேடு, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
News April 2, 2025
சோடியம் நைட்ரேட் ஊசி செலுத்தி மாணவர் உயிரிழப்பு

கொடுங்கையூரை சேர்ந்த கல்லூரி மாணவர் பால் யூட்டி கிளாஸ்(20), செல்போனுக்கு அடிமையான இவர் மன அழுத்தத்தில் தூக்கத்தை தொலைத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சோடியம் நைட்ரேட் ஊசியை தனக்கு தானே செலுத்தி மயக்கமடைந்துள்ளார். பதறிபோன பெற்றோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படிக்க வேண்டிய வயதில் இவ்வாறு நிகழ்ந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News April 2, 2025
சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிப்போரது எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. அந்த வகையில், நடப்பாண்டில் (2025) மார்ச் மாதத்தில் 92 லட்சத்து 10 ஆயிரத்து 69 பேர் பயணம் செய்துள்ளனர். மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக, மார்ச் 7ஆம் தேதி அன்று 3 லட்சத்து 45 ஆயிரத்து 862 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கியூ.ஆர். குறியீடு டிக்கெட் மற்றும் பயண அட்டை டிக்கெட்டிற்கு 20% தள்ளுபடி செய்கிறது.