News March 11, 2025
“வாட்ஸ் அப்” குழு மூலம் மோசடி! உஷார் மக்களே

myv3, GBY பாணியில் மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவ்வகையில், கோவையில் “வாட்ஸ் அப்” குழுவில் லாட்டரி குலுக்கல் பரிசு என கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார், கண்ணன், ராஜசேகரனை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். அதிக சம்பாதிக்கலாம் என ஆசைபட்டு, மோசடி வலையில் சிக்கிக் கொள்கின்றனர். உங்க உறவினர்கள் உஷாராக இருக்க Share பண்ணுங்க.
Similar News
News April 21, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (20.4.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 20, 2025
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சாமிநாதன் கயல்விழி, பவன்குமார் க.கிரியப்பனவர் ஆகியோர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கூலி உயர்வு பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
News April 20, 2025
கோவை: கடைக்கு சீல் வைத்ததால் தற்கொலை

கோவை மாவட்டம் கலிக்கநாயக்கன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக பெட்டிக்கடைக்கு போலீஸார் நேற்று சீல் வைத்தனர். இந்த நிலையில், நேற்று மன உளைச்சல் அடைந்த கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.