News April 4, 2024
வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

கணியம்பாடியை அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில், தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று ( ஏப்ரல் 3) நடந்தது. இதில் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டு, ஊர்வலமாக சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Similar News
News April 20, 2025
வேலூர் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் மகிமை

வேலூர் விரிஞ்சிபுரத்தில், 1,000 ஆண்டுகள் பழைமையான மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, பெண்கள் கோயில் குளத்தில் நீராடி, ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு, தீவினைகள் நீங்குவதோடு திருமண வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News April 20, 2025
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஏப்ரல் 19) நடத்திய சோதனையில் 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
News April 19, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 19) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.