News November 15, 2024
வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்த சிறப்பு முகாம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2025-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை வாக்காளர்கள் மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை (நவ.16) மற்றும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
Similar News
News November 19, 2024
ஈரோடு கலெக்டரிடம் நேரில் சந்தித்து எம்எல்ஏ மனு
பெருந்துறையில் அமைந்துள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 40 கோடி செலவில் புதிதாக அமைய உள்ள தீவிர சிகிச்சை பிரிவு கட்டட பணியை விரைந்து முடிக்குமாறு பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். சந்திப்பின்போது மாவட்ட பொருளாளர் மணி பங்கேற்றார்.
News November 19, 2024
ஈரோட்டில் 40 பேர் மீது குண்டாஸ்
ஈரோடு மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதுவரை சாராயம் காய்ச்சி விற்றதாக 5 பேர், கஞ்சாவிற்ற 9 பேர், வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட 10 பேர், தொடர் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பேர், மசாஜ் சென்டர்களில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக 9 பேர் என கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி ஜவகர் தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
ஈரோட்டில் 8500 பேர் புதிதாக விண்ணப்பம்
ஈரோடு மாவட்டத்தில் நவ.16, 17 ஆகிய இரண்டு நாட்களாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெற்றது, இதில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்க்க 8,541 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 2,221 வாக்குச்சாவடி முகாம்கள் நடைபெற்றன. மொத்தம் 17,423 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவ்வாறு ஈரோடு தேர்தல் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.