News March 24, 2024

வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை

image

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

Similar News

News November 19, 2024

தூத்துக்குடி காவல்துறை சார்பில் நாளை குறைதீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை (நவ.20) காலை குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு நீண்ட காலமாக கிடப்பில் உள்ள மனுக்கள் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை

image

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆண்டு முழுவதும் பல லட்சம் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. துறைமுகத்தில் உள்ள நான்காவது சரக்கு தளத்தில் 29,212 டன் நிலக்கரி கையாண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 25,900 நிலக்கரி கையாண்ட சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

News November 19, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(நவ.,19) காலை 7 மணி வரை பெய்த மழை அளவு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக குலசேகரப்பட்டினத்தில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் 15, காயல்பட்டினம் 13, கயத்தாறு 10 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஓட்டப்பிடாரம் 4.50m சாத்தான்குளம் 3.40, மில்லி மீட்டர் கடம்பூர் வைப்பார் தலா 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.