News October 29, 2024

வழிப்பறியில் ஈடுபட்ட 2 மாணவர்கள் உட்பட 4 பேர் கைது

image

பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த 4 பேரை விசாரணை செய்தனர். அதில் டீக்கடை தொழிலாளியிடம் 4 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 4 பேரை போலீசார் நேற்று(அக்.28) கைது செய்தனர், அவர்களிடம் இருந்து இரும்பு கம்பி செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 20, 2024

நெல்லை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 100 சென்டிமீட்டர் மழை

image

நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று(நவ.20) காலை வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் நாலு முக்கு பகுதியில் 166 மி.மீ., ஊத்து பகுதியில் 154 மி.மீ., காக்காச்சியில் 136 மி.மீ. என கடந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 10 மணி வரை நிலவரப்படி 100 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 20, 2024

வெள்ள தடுப்பு அறிவுரை வழங்கிய மாவட்ட நிர்வாகம்

image

நெல்லை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மக்கள் மழை நேரங்களில் டார்ச் லைட், வானொலி பெட்டி போன்றவை தயாராக வைத்திருக்க வேண்டும். குடை மற்றும் மூங்கில் கம்பு ஒன்றை வைத்திருக்க வேண்டும். முதலுதவி பெட்டி வைத்திருக்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

News November 20, 2024

நெல்லை: மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குறிப்பாக இன்று(நவ.20) பள்ளிகளுக்கு நெல்லையில் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மழைக்கால அவசர உதவி எண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.