News October 15, 2024
வளர்கலைக் கூடத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓவியம், சிற்பம், புகைப்படம் உள்ளிட்டவைகளை காட்சிப்படுத்த கலை, பண்பாட்டுத்துறை மூலம் அரசு அருங்காட்சியகத்திற்கு அருகே எளிய முறையில் வளர்கலைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, கலை படைப்புகளை காட்சிப்படுத்த, ஓவியர்கள் மற்றும் சிற்பிகளிடம் இருந்து விண்ணப்பங்களை கலை பண்பாட்டுத்துறை வரவேற்கிறது என்றார்.
Similar News
News November 20, 2024
புதுவையில் 23 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
புதுவை தொழிலாளர் துறை இயக்குனர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி இன்று வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் வரும் 23 ஆம் தேதி முகாம் நடைபெறுகிறது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 2500-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளன. இதில் 10, 12 வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் இளநிலை பட்டம் முடித்தவர்கள் பங்கேற்கலாம்.
News November 19, 2024
மாணவியின் புகைப்படம் வைரல் – வழக்கு
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வரும் 22 வயது மாணவி ஒருவர் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் துறையில் படித்து வருகிறார். வரலாறு படிக்கும் மாணவரான சூர்ய நாராயணன் மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, பிற மாணவர்களுக்கும் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளார். இந்நிலையில், மாணவியின் புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
News November 19, 2024
சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் திடீர் போராட்டம்
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 300-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்க சிறை நிர்வாகம் மறுத்து வருவதாக கூறப்படுகிறது இதை எதிர்த்து ஆயுள் தண்டனை கைதிகள் நேற்று சமையல் வேலை செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இது சிறைக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில் விசாரணை கைதிகள் மூலம் சமையல் செய்து மற்ற கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்டது