News March 20, 2025
வரி செலுத்தாத கடை முன் கழிவுநீர் வாகனம் நிறுத்தம்

இராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 50000 குடியிருப்புகள் மூலம் ஆண்டுக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பாதாள சாக்கடை வரி என ரூ.17 கோடி வரை வரி வசூலிக்கப்பட வேண்டும். நடப்பு ஆண்டு வரியுடன் நிலுவையில் உள்ள வரியை வசூலிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வரி செலுத்தாத வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் முன் குப்பை வாகனம், கழிவுநீர் வாகனத்தை நிறுத்தி மிரட்டுகின்றனர்.
Similar News
News March 21, 2025
7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு. தமிழ்நாட்டில் வரும் 25ம் தேதி வரை ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. *ஷேர்
News March 21, 2025
இறந்தவர்களின் உடலை தண்ணீரில் தூக்கிச் செல்லும் அவலம்

பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணிச்சியேந்தல் கிராமத்தில் மயானத்திற்கு செல்வதற்கு ஊரின் நடுவே அமைந்துள்ள கால்வாயை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் கால்வாயில் தண்ணீர் செல்வதால் கிராம மக்கள் இறந்தவரின் உடல்களை தண்ணீர்குள் இறங்கி தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. முறையாக பாலம் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.
News March 21, 2025
இராமநாதபுரத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.ஆர் சேதுபதி நகரில் நேற்று(மார்ச்.20) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி செய்து வந்த பழனி என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை இராமநாதபுரம் அப்பாஸ் அலி அறக்கட்டளை சேர்மன் அமீர் அம்சா காவல் துறை உதவியோடு உடலை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.