News April 14, 2025

வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி – பாஜக தலைவர்

image

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து நேற்று நெல்லை வந்த அவரை பொதுமக்கள் கட்சியினர் சிறப்பாக வரவேற்றனர். இதற்கு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் அளித்த அமோக வரவேற்பு என்னை நெகிழ்ச்சியடையச் செய்தது. மாபெரும் வரவேற்பளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது அன்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

Similar News

News April 17, 2025

மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் விசாரணை

image

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வழக்கு விசாரணை இன்று (ஏப்.17) நடைபெற்றது. இதில், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கலந்துகொண்டு விசாரணை மேற்கொண்டார். காலையில் தொடங்கிய இந்த விசாரணை மாலை வரை நீடித்தது. 

News April 17, 2025

நெல்லை: கூட்டுறவு வங்கியின் சார்பில் கடன் மேளா அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் நெல்லை மாவட்டத்தில் உள்ள தலைமையகம் மற்றும் 17 கிளைகளில் வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடன் மேளா நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி கொக்கரகுளம் ரோஸ் மஹாலில், 22 ஆம் தேதி வள்ளியூர் எம் எஸ் மகாலில், 24 ஆம் தேதி அம்பை அரோமா பள்ளியில் நடக்கிறது.

News April 17, 2025

கன்னியாகுமரி – சென்னை சிறப்பு ரயில்

image

விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்(06089) சென்னையிலிருந்து இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக மறுநாள் காலை 10 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேருகிறது. மறு மார்க்கத்தில் சிறப்பு ரயில்(06090) 18ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு அதற்கு மறுநாள் காலை சென்னை வந்தடையும்

error: Content is protected !!