News April 13, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

காவல்: திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
Similar News
News April 15, 2025
பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளாம். பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 15, 2025
சிவலிங்க மேனியில் சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வு

தி.மலையில் சிவலிங்க மேனியில் சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வு நிகழ்ந்துள்ளது. தி.மலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை சன்னதியில், சிவலிங்க திருமேனியை சூரிய பகவான் வணங்குவதாக சொல்லப்படும் ஐதீகம். இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்நிகழ்வு நடந்தேறியது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். ஷேர் பண்ணுங்க
News April 14, 2025
இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (14.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவலர்களின் கைப்பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியில் பாதுகாப்பின்மை ஏற்படுத்தும் நபர்களை கண்டால் 100 டயல் செய்யவும்.