News March 25, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இதுநாள் வரை பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

Similar News

News April 14, 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பதிவு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்லும் போது மிதவேகத்தில் செல்வோம், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம் என வாசகங்கள் அடங்கிய புகைப்படத்தை பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

News April 14, 2025

திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News April 14, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம் 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 13) இரவு ரோந்து போலீஸ் பட்டியல் விவரங்கள் வெளியாகிவுள்ளது. ஆம்பூர் டவுன், ஆம்பூர் தாலுகா, வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா, திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலுகா, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அலங்காயம், உமராபாத், உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் இன்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்ணை அழைக்கலாம். 

error: Content is protected !!