News March 27, 2025

ரூ.75 லட்சம் கிரிப்டோ கரன்சி மோசடி செய்த மூவர் கைது

image

திசையன்விளையை சேர்ந்த அந்தோணி செல்வம் (40) ஆன்லைன் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம்  ரியாஸ் (36), அய்யாதுரை (37), இசக்கி முத்து (28) ஆகியோர் ரூ.75 லட்சம் கொடுத்து 82,691 எண்ணிக்கையிலான அமெரிக்க டெதர் டாலர் கிரிப்டோ கரன்சியை ஆன்மூலம் பெற்றுள்ளனர். அவர்கள் கொடுத்த ரூ.75 லட்சம் கலர் ஜெராக்ஸ் என தெரியவந்த நிலையில் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News August 11, 2025

நெல்லை: ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்!

image

அக்டோபர் 13 முதல் 26 வரை ரயில் பயணம் செய்பவர்கள் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை ரிட்டன் பயணம் 2ம் வகுப்பு டிக்கெட் எடுத்தால் அவர்களுக்கு 20% பயண கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நெல்லையிலிருந்து சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இது பொருந்தும். SHARE பண்ணுங்க!

News August 11, 2025

நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் அழைப்பு

image

இன்று (11.08.2025) காலை 11:00 மணியளவில் மாநகராட்சி மைய அலுவலக இராஜாஜி மண்டப கூட்ட அரங்கில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆணையாளர் மற்றும் துணை மேயர் ராஜி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் விவாதிக்கப்பட உள்ளதால் கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டும் என மேயர் அழைப்பு கொடுத்துள்ளார்.

News August 10, 2025

ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழப்பு

image

கருங்குளம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் பாளை திருச்செந்தூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக பைக் மோதியதில் பாலமுருகன் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த பாலமுருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து சிவந்திப்பட்டி போலீசார் விசாரணை.

error: Content is protected !!