News November 5, 2024
ரூ 21,82,455 வட்டியுடன் வழங்க ஐகோர்டு உத்தரவு
குமரியில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி 2019-ல் ஓய்வு பெற்ற ரீட்டா மேரியின் ஓய்வூதிய பண பலன்களை பொய் புகாரின் பேரில் அதிகாரிகள் வழங்கவில்லை. இதனால் மதுரை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார். நேற்று நீதிபதி சத்தியநாராயண பிரசாத் விசாரணையின் போது, பலன்களை இழுத்தடிப்பது சரியல்ல. மனுதாரருக்கு வழங்க வேண்டிய தொகை ரூ 21,82,455-ஐ வட்டியுடன் 8 வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Similar News
News November 20, 2024
குமரியில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
குமரி உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
News November 20, 2024
குமரி ஆட்சியர் இன்று ஆய்வு நடத்தும் இடங்கள்
இன்று (நவ.20) காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணிவரை “உங்களை தேடி உங்கள் ஊரில் ” திட்டப்படி மாவட்ட ஆட்சியர் அழக மீனா ஆய்வு நடத்தும் இடங்கள்: வேர்க்கிளம்பி பேரூராட்சி அலுவலகம், குமரன்குடி கிராம நிர்வாக அலுவலகம், PACB, அங்கன்வாடி, திருவட்டார் பஸ் நிலையம், காவல் நிலையம், சார்பதிவகம், G.H.S. அரசு பணிமனை, குலசேகரம் அரசு ஆஸ்பத்திரி, தீயணைப்பு நிலையம், பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையம், வானிலை மையம்.
News November 19, 2024
சுசீந்திரம் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரிசனம்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ஶ்ரீ தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் இன்று (நவ.19) நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். மேலும் அங்குள்ள சுற்று பிரகாரத்தை சுற்றி மனம் உருகி பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து அங்கு வந்த பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.