News April 4, 2025

ரூ.1 கோடி லஞ்சம் ; காவல் ஆய்வாளர் கைது

image

ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கிய புகாரில் தர்மபுரியை சேர்ந்த காவல் ஆய்வாளர் நெப்போலியன் கைது செய்யப்பட்டார். நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் என்பவர் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனிப்படையினர் நெப்போலியனை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

Similar News

News April 8, 2025

ரூ.1 லட்சம் வரை சம்பளம்; எப்படி விண்ணப்பிப்பது?

image

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)மூலம் மேனேஜர், நிறுவன செயலாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: மேனேஜர் பதவிக்கு CA/CMA /MBA.செயலாளர்- பட்டப்படிப்புடன் ACS முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு- 45 வயது வரை. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.

News April 8, 2025

அரசு மானியத்தில் வழங்கப்படும் நீதி விவரம்

image

அரசு மானியத்தில் நாட்டு கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25.00 லட்சம் வரையும், செம்மறி ஆடு ,வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ‌10.00 லட்சம் முதல் ரூ. 50.00 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ. 15.00 லட்சம் முதல் ரூ. 30.00 லட்சம் வரையும், வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு தீவன தொகுதி, மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது என ஆட்சியர் தகவல்.

News April 8, 2025

இளைஞர் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐ மாற்றம்

image

கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் உயிர் இழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சிங்காபுரம் வனப்பகுதியில் யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தப்பியோடியதாக கூறப்பட்ட ஏமனூர் இளைஞர் செந்தில் மர்மமான முறையில் உயிர் இழந்தார். இது மாநில அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!