News October 20, 2024
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் நாளை காலை 8.30 வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 20, 2024
படகோட்டி உரிமம் பெற மீனவர்களுக்கு பயிற்சி
படகோட்டி உரிமம் பெற மீனவர்களுக்கு தமிழக அரசு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் தேவையான பயிற்சி வழங்கப்பட உள்ளது. தகுதியான மீனவர்கள்,மீனவ இளைஞர்கள், நாட்டுப்படகு, விசைப்படகு ஓட்டுநர்கள் மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் விண்ணப்பம் பெற்று இணையத்தில் பதிவேற்றம் செய்து பயிற்சியில் பங்கேற்கலாம் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
128080 ஹெக்டேர் பயிர்க்காப்பீடு பதிவு
இராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கு பிரதான மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெற்பயிருக்கு ஏக்கர் 1-க்கு பிரீமியம் தொகை ரூ.352 ஆகும். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 15.11.2024 வரை 128080 ஹெக்டேருக்கு 125648 விவசாயிகள் நெற்பயிருக்கு பிரதான மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்து உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
மணிமண்டபத்திற்கு தடை விதிக்க மறுப்பு
ராமநாதபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடியில் மணிமண்டபம் அமைக்க கடந்த ஆண்டு முதல்வர் அறித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அரசின் கொள்கை முடிவிற்கு தலையிட முடியாது எனக் கூறி மணிமண்டபம் கட்டும் அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.