News April 14, 2024
ராமநாதபுரம்: நீத்தார் நினைவு தினம்
ராமநாதபுரம் தீயணைப்பு படை அலுவலகத்தில் நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 14) தீயணைப்பு படை அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் வீரச்செயல் புரிந்து உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட தீயணைப்பு படை அலுவலர் அப்பாஸ் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் ஏராளமான வீரர்கள் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.
Similar News
News November 20, 2024
இராமநாதபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று(நவ.,20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News November 20, 2024
படகோட்டி உரிமம் பெற மீனவர்களுக்கு பயிற்சி
படகோட்டி உரிமம் பெற மீனவர்களுக்கு தமிழக அரசு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் தேவையான பயிற்சி வழங்கப்பட உள்ளது. தகுதியான மீனவர்கள்,மீனவ இளைஞர்கள், நாட்டுப்படகு, விசைப்படகு ஓட்டுநர்கள் மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் விண்ணப்பம் பெற்று இணையத்தில் பதிவேற்றம் செய்து பயிற்சியில் பங்கேற்கலாம் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
128080 ஹெக்டேர் பயிர்க்காப்பீடு பதிவு
இராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கு பிரதான மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெற்பயிருக்கு ஏக்கர் 1-க்கு பிரீமியம் தொகை ரூ.352 ஆகும். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 15.11.2024 வரை 128080 ஹெக்டேருக்கு 125648 விவசாயிகள் நெற்பயிருக்கு பிரதான மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்து உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.