News April 16, 2025
ராமநாதபுரத்தில் 2.30மணி வரை மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மதியம் 2.30 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர்
Similar News
News April 19, 2025
இராமநாதபுரம்: கோடை கால இலவச பயிற்சி முகாம் – ஆட்சியர்

இராமநாதபுரம், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்தில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை (21 நாட்கள்) காலை, மாலை இரு வேளைகள் நடைபெறும். இதில், தடகளம், ஹாக்கி, டென்னீஸ், இறகுப்பந்து, ஜூடோ, இதர விளையாட்டுகளுக்கு இலவச பயிற்சி & அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலத்தில் பெயரை பதிவு செய்ய வேண்டும் – ஆட்சியர் (18 வயதிற்குட்பட்டவர்கள்)*ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
சிறுமிகளுக்கு சர்ச் பாதிரியார் பாலியல் தொந்தரவு

மண்டபம், கோயில்வாடி புனித அருளானந்தர் சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்தவர் ஜான் ராபர்ட் (46). இவர் 2022ம் ஆண்டு வழிபாட்டிற்கு வந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். குழந்தைகள் நலக்குழுவின் புகாரில் போக்சோ வழக்கில் ஜான்ராபர்ட்டை கைது செய்தனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம் ஜான்ராபர்ட்டுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.9000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
News April 18, 2025
இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு மேலே உள்ள படத்தில் உள்ள தொலைபேசி எண்களை அழைக்கலாம்.