News April 12, 2025
ராமநாதபுரத்தில் 187 சமையல் உதவியாளர் பணி

ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 187 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. தேர்வான ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அதன் பின்பு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் வரும் ஏப். 29க்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.*SHARE பண்ணவும்
Similar News
News August 9, 2025
ராம்நாடு: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

ராமநாதபுரம் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News August 9, 2025
BREAKING: திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவிற்கு புதிய பதவி

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா, அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இன்று (ஆகஸ்ட்.09) அவருக்கு திமுக இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இப்பொறுப்பை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வழங்கினார்.
News August 9, 2025
ராமநாதபுரம் வழுதூரில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ராமநாதபுரம், வழுதூர் பகுதியைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய அமைப்பாளர் கவுதமன் வீட்டில், கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஊர் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் கோவிந்தனின் மகன் பிரபு பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேணிக்கரை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.