News May 7, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

30 ஏப்ரல் 2025 அன்று, ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், வலுவான கடவுச்சொல் பயன்படுத்துவது உங்கள் தரவுக்கான ‘டிஜிட்டல் சீட் பெல்ட்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. “உங்கள் தரவு, உங்கள் பொறுப்பு” என்ற குறிப்புடன், இணைய பாதுகாப்பில் கடவுச்சொல் முக்கியத்துவத்தை விளக்கும் இந்த விழிப்புணர்வு மக்களுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது.

Similar News

News August 9, 2025

ராணிப்பேட்டை காவல்துறை விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் தினந்தோறும் சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்படுகிறது. அதன்படி இன்று வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்ட முயற்சிக்காதீர்கள் உங்களுக்காக உங்கள் குடும்பம் காத்திருக்கிறது மதுபோதையில் பயணம் செய்வதை தவிர்ப்போம்.. பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம்…என விழிப்புணர் செய்தியை வெளியிட்டுள்ளது.

News August 9, 2025

ராணிப்பேட்டையில் குடிமைப்பணிகள் தேர்வு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பபணிகள் குடிமைப்பணிகள் தேர்வுகள் வருகிற 17, 18-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 தேர்வு கூடங்களில் நடைபெற உள்ளது. தேர்வினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 781 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்விற்காக கூடுதல் சிறப்பு பஸ் வசதிகள் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்

News August 9, 2025

ராணிப்பேட்டை: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

image

பேருந்து நிலையங்கள், சாலையோர மோட்டல்களில் உணவு பொருட்களை MRPஐ விட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். MRPஐ விட கூடுதல் விலைக்கு விற்பது, எக்ஸ்பயரி தேதி மாற்றி வைப்பது, வேறு ஸ்டிக்கரை அதன்மேல் ஒட்டி வைப்பது போன்றவற்றை கண்டால் FSSAIன் 9444042322 வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம் (அ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350918>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!