News April 6, 2025
ராஜஸ்தான் அணி அபார வெற்றி

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் அணி வெற்றி கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், அபாரமாக விளையாடி 205 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். அதனை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் ஆரம்பம் முதலே சொதப்பியது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ராஜஸ்தானின் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Similar News
News April 8, 2025
ஜெயலலிதா தவறவிட்டதை சாதித்து காட்டிய ஸ்டாலின்..!

முதல்வரை பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாற்றவும், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பதற்கும் அதிகாரமளிக்கும் தீர்மானங்கள் ஜன. 5 1994-ல் அப்போதைய CM ஜெயலலிதாவால் TN சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்க அப்போதைய கவர்னர் சென்னா ரெட்டி மறுத்துவிட்டார். அதே தீர்மானங்களை 2022-ல் நிறைவேற்றிய CM ஸ்டாலின், சட்டப் போராட்டம் நடத்தி கோர்ட் மூலம் அந்த அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.
News April 8, 2025
பயங்கர சரிவு: ரூபாய் மதிப்பு 50 காசுகள் வீழ்ச்சி

டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு எச்சரிக்கையால், உலக பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 32 காசுகள் குறைந்து ₹85.76-ஆக இருந்தது. இந்த சரிவு இன்றும் தொடர்ந்தது. காலையில் ₹85.89-ஆக தொடங்கி பின்னர் வர்த்தக நேர முடிவில் ₹86.26-ஆக நிறைவடைந்தது. இது நேற்றைய மதிப்புடன் ஒப்பிடுகையில் 50 காசுகள் குறைவு. கடந்த 3 மாதங்களில் இது பெரிய வீழ்ச்சி.
News April 8, 2025
KKR அணிக்கு இமாலய இலக்கு

KKR அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் LSG அணி இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்களான மார்க்ரம் & மார்ஷ் அபாரமாக விளையாடி, முறையே 47 & 81 ரன்கள் எடுத்தனர். அதன் பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் 36 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. சேஸ் செய்யுமா கொல்கத்தா அணி?